இரட்டைச்சுவையுடன் ‘ஜிகர்தண்டா’

No comments
மார்ச் 3ம் திகதி ஜிகர்தண்டா படத்தின் ஓடியோவும், டிரைலரும் வெளியாகவுள்ளது. சுவையான ’பீட்சா’வை தந்த கார்த்திக் சுப்புராஜ் அடுத்து தரவிருக்கும் ட்ரீட் ’ஜிகர்தண்டா’. இந்தப் படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன் ஜோடியாக நடித்திருக்க, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார்.
 கொலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. 
 இந்நிலையில் மார்ச் 3ம் திகதி ‘ஜிகர்தண்டா’வின் ஓடியோவும், டிரைலரும் வெளியாகி ரசிகர்களுக்கு இரட்டைச்சுவை படைக்கவிருக்கிறது. 
 பீட்சா படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இப்படத்திலும் அவர் மாறுபட்ட ஒரு கதைக்களத்தை சொல்லியிருக்கிறாராம்.

No comments :

Post a Comment