ஆந்திர திரையுலகில் முதல் முறையாக

No comments
பாகுபலி படத்திற்காக தனது உடல் எடையை 50 கிலோ அதிகரித்துள்ளாராம் தெலுங்கு நடிகர் பிரபாஸ். எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கி வரும் பாகுபலி படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சரித்திரப் படமான பாகுபலியில் பிரபாஸுக்கு இரட்டை வேடம். இந்நிலையில் படத்திற்காக பிரபாஸ் தனது உடல் எடையை கூட்டியுள்ளார். 
 பாகுபலி படத்திற்காக உடல் எடையை அதிகரிக்குமாறு ராஜமவுலி பிரபாஸிடம் தெரிவித்துள்ளார். ராஜமவுலி கூறியபோது பிரபாஸ் ஸ்லிம்மாக இருந்துள்ளார். எடையை கூட்டுவது என்றால் கண்டமேனிக்கு சாப்பிட வேண்டும் என்று பிரபாஸ் நினைக்கவில்லை. 
மாறாக டபுள்யூடபுள்யூஎஃப் வீரர்கள் உபயோகிக்கும் ஜிம் உபகரணங்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்தார். வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட உபகரணங்களை வைத்து ரூ.1.5 கோடி செலவில் தனது வீட்டில் ஜிம் ஒன்றை அமைத்திருக்கிறார். 
 சில நடிகர்கள் போன்று வெளிநாட்டு பயிற்சியாளர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளவில்லை பிரபாஸ். மாறாக உள்ளூர் பயிற்சியாளரை வைத்தே எடை கூட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
 இதுவரை அவர் 50 கிலோ எடையை அதிகரித்து 102 கிலோவாக உள்ளார். படத்திற்காக ஒரு தெலுங்கு ஹீரோ 50 கிலோ எடையை கூட்டியிருப்பது இது தான் முதல் முறை என்கிறார்கள். 
 பிரபாஸின் தொழில் பக்தியை பார்த்து டோலிவுட்டே ஆச்சரியப்பட்டுக் கிடக்கிறது.

No comments :

Post a Comment