மதகஜராஜா மூலம் மீண்டும் கோடம்பாக்க கதவுகளை தட்டுகிறார் அஞ்சலி!

No comments
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த முதல்படம் மதகஜராஜா. இந்த படத்தில் அஞ்சலி-வரலட்சுமி இருவரும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தனர். இப்படத்துக்காக மூன்று விதமான கெட்டப்புகளில் ரிஸ்க் எடுத்து நடித்திருந்தார் விஷால். அதனால் அதிக எதிர்பார்ப்புடன இருந்தார். ஆனால் படத்தை தயாரித்த நிறுவனம் ஏற்கனவே சில தோல்வி படங்களை கொடுத்ததால், அந்த படங்களை வாங்கி நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் குறைந்த விலைக்கு விஷால் படத்தை கேட்டனர். 
அதற்கு தயாரிப்பு நிறுவனம் மறுக்கவே படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், ஒரு கட்டத்தில் நான் ரிலீஸ் பண்ணிக்காட்டுகிறேன் என்று சவாலாக களத்தில் இறங்கினார் விஷால். 
ஆனால், அவர் வேறு பேனரில் படத்தை ரிலீஸ் செய்ய களமிறங்கினபோதும் யாரும் உடன்படவில்லை. இதனால் பல லட்சங்களை செலவு செய்த விஷால், அதனால் ஏற்பட்ட மன உளச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 அதோடு, அந்த பிரச்னையில் இருந்தும் விலகிக்கொண்டார். அதையடுத்து, பல மாதங்களாக மதகஜராஜாவை வெளியிட நடந்த பேச்சுவார்த்தை, முயற்சிகளின் பலனாக இப்போது மார்ச் 7-ந்தேதி வெளியிடுவதாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், இந்த படத்தின் வெற்றி தோல்வி விசயத்தில் எந்த அக்கறையும் இல்லாமல் விஷால் இருந்தபோதும், படத்தில் நடித்துள்ள அஞ்சலி மதகஜராஜாவை பெரிய அளவில் எதிர்பார்க்கிறார்.
 இப்படத்தில் கலகலப்பு படத்தை மிஞ்சும் வகையில், கவர்ச்சிக்கோதாவில் இறங்கியுள்ள அவர், இப்படம் திரைக்கு வரப்போகிறது என்ற தகவல் தனக்கு கிடைத்ததும், இந்த சூட்டோடு சூடாக சில படங்களை கைப்பற்றி விட வேண்டும் என்பதற்காக தனது அபிமானத்திற்குரிய இயககுனர்களுக்கு போன் போட்டு நலம்குலம் விசாரிக்கும் சாக்கில் சான்ஸ் கேட்டும் கல்லெறிந்து வருகிறார்.
 மேலும், தனது அன்பிற்குரிய ஹீரோக்கள் சிலரிடமும் சிபாரிசு கோரியுள்ளாராம் அஞ்சலி.

No comments :

Post a Comment