கமல், விக்ரம் வரிசையில் அட்டகத்தி தினேஷ்!
ராஜபார்வை படத்தில் கண் பார்வை இல்லாதவராக கமல் நடித்திருந்தார். அதற்கடுத்த காசியில் விக்ரம் நடித்தார். அவதாரம் படத்தில் ரேவதி நடித்தார், பேரழகனில் ஜோதிகா நடித்தார். நான் கடவுளில் பூஜா நடித்தார்.
இப்படி நடித்த அத்தனை பேருக்குமே அந்த கதாபாத்திரம் பேரும் புகழையும் வாங்கிக்கொடுத்துள்ளது. அந்த வகையில், இப்போது குக்கூ படம் மூலம், அட்டகத்தி தினேசும், மாளவிகா நாயரும் அந்த பட்டியலில் இடம்பிடிக்கிறார்.
கண்பார்வை இல்லாத நாயகனாக தினேசும், கண் பார்வையில்லாத நாயகியாக மாளவிகா நாயரும் நடித்துள்ள இந்த குக்கூ படத்தை எழுத்தாளர் ராஜூமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த கமல், சூர்யா என அத்தனை சினிமா ஜாம்பவான்களுமே ஒருகணம் ஸ்தம்பித்து போனார்கள்.
அந்த அளவுக்கு படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் அவர்களை ஆச்சர்யத்தில் உறைய வைத்தன.
இந்த படத்தில் நடித்தது பற்றி தினேஷ் கூறுகையில், கண் பார்வையில்லாதவர்களின் காதல் கதை என்று என்னிடம் கதையை சொன்னதுமே நெகிழ்ந்து போனேன்.
மேலும், இந்த மாதிரி கதையில் நடிப்பது அத்தனை எளிதல்ல. ரொம்ப கடினமானது என்பதும் தெரியும்.
அதனால், கண் பார்வை இல்லாதவர்கள் கண்களை எப்படி வைத்திருக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்து பயிற்சி எடுத்தேன். அதற்காக மாதக்கணக்கில் செலவு செய்தேன்.
அதையடுத்து, படப்பிடிப்பில் நடித்தபோது ஒரு திசையிலேயே பார்த்தபடி இருந்ததால் கண்களில் வலி ஏற்பட்டது.
இருப்பினும் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்பதால் எதையும கருத்தில் கொள்ளாமல் நடித்தேன்
.
இப்போது படத்தைப்பார்த்துவிட்டு அனைவரும பாராட்டுகிறார்கள். ரொம்ப சந்தோசமாக உள்ளது என்கிறார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment