சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நயன்
சிம்புவும், நயன்தாராவும், காதலித்து பிரிந்தவர்கள். தற்போது, இது நம்ம ஆளு படத்தில், மீண்டும் காதலர்களாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமின்றி, படத்தில், ரொம்ப இயல்பாகவும், அன்னியோன்யமாகவும் நடித்து வருகின்றனர். அவர்களின், இந்த மாறுதலைப் பார்த்து, கோடம்பாக்கம் வட்டாரமே, மூச்சடைத்து போயிருக்கிறது.
மற்ற நடிகர் - நடிகைகளைப்போல், ஷாட் முடிந்ததும் கேரவனுக்குள் சென்று, தலைமறைவாகிக் கொள்ளாமல் படப்பிடிப்பு தளத்திலேயே, சேர் போட்டு அமர்ந்து, மனம் விட்டு பேசிக் கொண்டிருக்கின்றனர், இருவரும்.
மேலும், சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்று, நயன்தாரா, அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment