அட்வைஸ் மழை பொழிந்த சிவகார்த்திகேயன்

No comments
பெற்றோர்களை மகிழ்ச்சியாக வைத்திருங்கள் என்ற அட்வைஸ் மழை பொழிந்துள்ளார் சிவகார்த்திகேயன். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரியின் 44 வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசுகையில், நான் பி.இ. எம்.பி.ஏ படித்திருந்தாலும் நடிப்புத் துறைக்கு விரும்பி வந்துள்ளேன். 
கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உங்களுக்கு பரிசுகள் வழங்கும் அளவுக்கு பிரபலமடைந்துள்ளேன் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. மாணவர்கள் மது குடிப்பது, புகை பிடிப்பது போன்ற பழக்கங்களை நிறுத்திக் கொள்ளுங்கள், மேலும் மாணவ, மாணவிகள் பெற்றோர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருங்கள். 
 இன்னும் 10 ஆண்டுகளில் சினிமாத் துறையில் சாதிக்க வேண்டும் என்பது எனது எண்ணமாகும். நீங்கள் படிக்கும் படிப்பு வாழ்க்கையில் அவசியம் உங்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் என்று கூறியுள்ளார்.

No comments :

Post a Comment