ரஜினியிடம் போய் நான் சான்ஸ் கேட்கமாட்டேன்! -கொலவெறி அனிருத்
ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இவர் ரஜினிக்கு நெருங்கிய உறவினர். மேலும், எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம் என சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருக்கும் இவர் தற்போது தனுஷின் வேலையில்லா பட்டதாரி, சிவகார்த்திகேயனின் மான்கராத்தே ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
இதையடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படம், கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் என மெகா ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனால் யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள் பின் தள்ளிவிட்டு முன்னுக்கு சென்றிருக்கிறார் அனிருத்.
அதனால், இப்படி குறுகிய காலத்தில் முன்னணி இசையமைப்பாளராகி விட்ட அனிருத், அடுத்தபடியாக ரஜினியின் புதிய படத்திற்கு இசையமைப்பாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
இதுபற்றி அவரைக்கேட்டால், ரஜினி சார் படத்தில் இசையமைக்க சான்ஸ் கிடைத்தால் ரொம்ப சந்தோசப்படுவேன். ஆனால், அவர் உறவினர் என்பதற்காக நான் போய் சான்ஸ் கேட்க மாட்டேன. அடுத்து அவர் படத்தை இயக்குபவர் என்னை அழைத்தால் மட்டுமே செல்வேன்.
அப்படி அவர்கள் என்னை அழைத்து நான் இசையமைத்தால்தான் அது சரியாக இருக்கும். சந்தோசமாகவும இருக்கும் என்கிறார் அனிருத்.
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment