விஜய்யின் 57வது படம் தீரன்?

No comments
திடுதிப்பென்று படங்களுக்கான டைட்டிலை அறிவித்தால் பிரச்னைகள் பலரூபங்களில் வருகிறது என்பதால், சமீபகாலமாக முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு உடனடியாக டைட்டிலை அறிவிப்பதில்லை. அந்த வகையில், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் அஞ்சான் என்று அறிவித்தார்கள். அதையடுத்து, பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படத்திற்கும் சமீபத்தில்தான் இது நம்ம ஆளு என்று பெயர் வைத்தனர்.
 ஆனால், கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் மற்றும் சிம்பு நடித்து வரும் படங்கள், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படங்களுக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தலைப்பும் அறிவிக்கப்படவில்லை.
 இதில், முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 57-வது படத்திற்கு வாள் என்று தலைப்பு வைத்திருப்பதாக ஆரம்பத்தில் செய்திகள் கசிந்தன. ஆனால், பின்னர் அதை அவர்கள் மறுத்து விட்டனர்.
 அதைத் தொடர்ந்து இப்போது தீரன் என்ற பெயரை முருகதாசும், விஜய்யும் பரிசீலித்துக்கொண்டிருப்பதாக அப்பட வட்டாரம் கிசுகிசுக்கிறது. இதற்கிடையே, ஆரம்பம் படத்தின் படப்பிடிப்பு முடிகிற வரைக்கும் அப்படத்தின் டைட்டிலை அறிவிக்காமல் இருந்தபோது, அஜீத்தின் ரசிகர்கள் குழம்பிப்போய் இருந்தது போல், இப்போது விஜய் ரசிகர்களும் இந்த தாமதத்தினால் குழம்பிப்போய் கிடக்கிறார்கள்.

No comments :

Post a Comment