தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் மைனா!

No comments
தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியுடன் இணைகிறார் அமலா பால். பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷும், இயக்குனர் வெற்றிமாறனும் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து ஒரு படத்தை உருவாக்குகிறார்கள். இப்படத்தில் மலைஉச்சியில் தேன் சேகரிக்கும் ரிஸ்க்கான கேரக்டரில் நடிக்கிறாராம் தனுஷ். இவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்க நடிகை அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
 ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் வேலையில்லா பட்டாதாரி படத்தில் ஏற்கெனவே தனுஷும், அமலா பாலும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.
 அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாக, படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

No comments :

Post a Comment