சிக்கலில் அஜித்- அனுஷ்கா ஜோடி

No comments
அஜித் படத்தில் நடிப்பதற்கு அனுஷ்காவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கௌதம் மேனன் படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் அஜித், இப்படத்தில் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்பதற்காக ஜிம்மிலேயே பழியாகக் கிடக்கிறார். இதில் அஜித்திற்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது, ஆனால், அவரோ கால்ஷீட் ஒதுக்க முடியாத நிலையில் இருக்கிறாராம். 
 ருத்ரம்மா தேவி, பாகுபாலி படங்களில் பிஸியாக இருப்பதோடு, சண்டைப் பயிற்சியில் கவனம் செலுத்துவதால் அனுஷ்கா இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியாகத் தெரிகிறாராம். ஆனால், அஜித் படத்தில் கொஞ்சம் இளமையாகத் தெரிய வேண்டும் என்பதால், அனுஷ்கா இதில் நடிப்பாரா? கௌதம் மேனன் அதுவரைக்கும் காத்திருப்பாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 
 வீரம் படத்தில் அஜித்துடன் நடிக்க அனுஷ்காவைத்தான் முதலில் தேர்ந்தெடுத்தனர். கால்ஷீட் பிரச்னையால் அனுஷ்கா நடிக்க முடியவில்லை. இப்போதும் அதே சிக்கல் வந்திருக்கிறது.

No comments :

Post a Comment