சித்தார்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி

No comments
சித்தார்த் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் மூலம் தனக்கு கிடைத்த வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியாக ‘ஜிகர்தண்டா’ படத்தில் கார்த்திக் சுப்பராஜுடன் சேர்ந்து தீயாக வேலை செய்திருக்கிறார் சித்தார்த். படம் மதுரையை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தாலும் படத்தின் பின்புலம் சினிமாவை அடிப்படையாக கொண்டுள்ளதாம். இதில் திரைப்பட இயக்குனராக நடிக்கிறார் சித்தார்த்.
 அதனால் இந்தப்படத்திற்குள்ளே கதைப்படி அவர் விஜய்சேதுபதியை வைத்து ஒரு சில காட்சிகள் இயக்குவதுபோல படமாக்கப்பட்டு இருக்கின்றனவாம். ‘பீட்சா’ மூலம் தனது சினிமா பாதையை தெளிவாக்கியவர் என்பதால் கார்த்தி சுப்பராஜுக்காக இந்தப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதியாகவே சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் விஜய் சேதுபதி.

No comments :

Post a Comment