விஷாலுக்கு ‘நார்கோலெப்ஸி’

No comments
நான் சிகப்பு மனிதன்' படத்தில் நார்கோலெப்ஸி வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளார் விஷால். யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை திரு இயக்குகிறார். இதில், விஷாலுக்கு ஜோடியாக லக்ஷ்மிமேனனும், இன்னொரு நாயகியாக இனியாவும், கொமடியனாக ஜெகனும் நடிக்கிறார்கள். இந்த படத்தில் நார்கோலெப்ஸி வியாதியால் பாதிக்கப்பட்டவராய் நடிக்கிறார் அதாவது நன்றாக இருக்கும்போதே திடீரென மயங்கி விழுந்துவிடுகிறார் விஷால். அவர் அப்படி மயங்கி விழுவது உண்மையில் ஒருவித தூக்கநிலைக்கு செல்வது போன்றதாம். அதிகப்படியான சந்தோஷமோ, துக்கமோ, பயமோ, கோபமோ வந்தால் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தூக்கநிலைக்குச் சென்றுவிடுவார்களாம். இந்த புதுமாதிரியான வியாதிக்கு ‘நார்கோலெப்ஸி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
 இந்த ‘நார்கோலெப்ஸி’ வியாதியால் விஷால் எப்படி பாதிக்கப்பட்டார்? கோபம் கொண்டு எதிரிகளிடம் சண்டை போடச் சொல்லும்போது தூக்கம் வராமலிருக்க என்ன செய்யப் போகிறார்? அதிக சந்தோஷத்தைக் கொடுக்கும் காதலியிடம் தூங்காமலிருந்து எப்படி ரொமான்ஸ் செய்யப் போகிறார்? அதிலிருந்து மீள்கிறாரா இல்லையா? என்பதை கொமடி, காதல் கலந்த ஆக்ஷன் கதையாக சொல்லவிருக்கிறது ‘நான் சிவப்பு மனிதன்’ படம். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

No comments :

Post a Comment