ஐஸ்வர்யாவால், விஜய்சேதுபதி வீட்டுக்காரம்மாவை பிரிந்திருக்கிறாரா.?! நெசந்தான் என்ன.?!

No comments
ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ என அடுத்தடுத்து இரண்டு படங்கள் விஜய்சேதுபதிக்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெற்று தராத நிலையில் அவரை பற்றி ஒரு வதந்தி கோலிவுட்டில் சமீபகாலமாக கோலோச்சி வருகிறது. அதாகப்பட்டது, இந்த இரண்டு படங்களிலும் அவருடன் இணைந்து நடித்த ஐஸ்வர்யாவுடன் நெருக்கமாக இருக்கிறார் விஜய்சேதுபதி! அதனால் அவரது வீட்டுக்காரம்மா கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார் என்னும் வதந்திதான் அது! இதுப்பற்றி விஜய்சேதுபதியின் நட்பு வட்டாரத்தில் விசாரித்தபோது…
 யார் சொன்னது? அதெல்லாம் கிடையாது நேற்றுகூட தன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகனையும், பிரிகேஜி படிக்கும் மகளையும், மனைவியையும் பைக்கில் அழைத்து கொண்டு அலுவலகத்திற்கும், வீட்டிற்கு இரண்டு ரவுண்ட் அடித்தார் என்றனர்! குடும்பத்துடன் பைக்கில் போய் ரொம்பநாள் ஆச்சு என்பதால் ஹெல்மட் உதவியுடன் இப்படி ஒரு ரவுண்டாம்! நம்புவோம்! இருந்தாலும் நெருப்பில்லாமல் புகையாதே? எனும் கேள்விக்கு விஜய்சேதுபதி தான் பதில் சொல்ல வேண்டும்!!

No comments :

Post a Comment