இன்றைய சினிமா: படத்தோட தலைப்புதாங்க இது

No comments
எதையாவது செய்து தங்கள் படத்தை வித்தியாசப்படுத்தி காட்ட வேண்டும் என்பதுதான் இன்றைய டிரண்ட். சிலர் தலைப்பிலேயே அந்த வித்தியாசத்தை தொடங்கி விடுகிறார்கள். அதில் ஒன்றுதான் ஒரு படத்துக்கு இன்றைய சினிமா என்று தலைப்பு வைத்திருப்பது. வி.கே.சிதம்பரம் என்பவர் டைரக்ட் செய்யும் இன்றைய சினிமாவில் ஜி.கே என்பவர் ஹீரோவாகவும், ஆஷா, பார்வதி ஆகியோர் ஹீரோயின்களாகவும் அறிமுகமாகிறார்கள். வெற்றிவேல் என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார்.
 படத்திற்கான தலைப்பின் காரணத்தை பற்றி இப்படி விளக்குகிறார் டைரக்டர் வி.கே.சிதம்பரம்… “நாடக கலையால் பிரிந்த குடும்பம், சினிமாவில் ஒன்று சேர்கிற கதை. ஒரு ஜமீன் குடுபத்து வாரிசுக்கு நாடகம் என்றால் உயிர் ஆனால் அந்த குடும்பத்துக்கு கலை ஆகாது. ஜமீன் வாரிசு நாடக நடிகையை திருமணம் செய்து கொள்ளவதால், அவரை கொன்று விடுகிறார்கள் ஜமீன் குடும்பத்தினர் இது 100 ஆண்டுக்கு முன்பு நடந்தது. இப்போது அதே ஜமீன் அரண்மணையில் படப்பிடிப்பு நடத்தச் செல்கிறது ஒரு படக்குழு, அதில் நடிக்கும் நடிகைக்கும், இப்போதைய ஜமீன் வாரிசுக்கும் காதல் வருகிறது. அன்று நடிகையை கல்யாணம் செய்தவரை கொலை செய்த குடும்பம் இன்று என்ன செய்கிறது என்பதுதான் கதை. அதுதான் இந்த தலைப்பு” என்கிறார்.

No comments :

Post a Comment