சினேகாவின் காதலர்களை சினேகாவுக்கு காட்டுவேன்: இயக்குனர் தடாலடி
பத்திரிகையாளர் முத்துராமலிங்கன் இயக்கி உள்ள படம் சினேகாவின் காதலர்கள். உதய், அத்திஷ், ரத்னகுமார், திலக் என்ற நான்கு புதுமுகங்களுடன் அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்த கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக அதாவது சினேகாவாக நடித்திருக்கிறார். இந்த படம் நடிகை சினேகாவின் பெயர் தாங்கி வருவதால் அதுபற்றி டைரக்டர் முத்துராமலிங்கன் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: இந்தப் படத்துக்கும் சினேகாவுக்கும் துளிகூட சம்பந்தம் இல்லை. நான் இப்படி ஒரு பெயர் வைத்திருக்கிறேன் என்று அவரிடம் சொல்லவும் இல்லை. என் பெயரை ஏன் வைத்திருக்கிறீர்கள் என்ற அவரும் என்னை கேட்கவில்லை.
இருவரும் நல்ல நண்பர்கள் என்பதால் அந்த நட்புக்காக படம் ரிலீசுக்கு முன்பு சினேகாவின் காதர்கள் படத்தை சினேகாவுக்க போட்டுக் காட்ட இருக்கிறேன்.
பெண்ணின் உணர்வுகளை பெண் இயக்குனர்களால்தான் முழுமையாக சொல்ல முடியும். துரதிர்ஷ்டவசாக ஆணாதிக்கம் நிறைந்த சினிமாவில் பெண் இயக்குனர்கள் மிகவும் குறைவு. நான் ஒரு பெண் இயக்குனரின் இடத்தில் இருந்து என் நாயகி சினேகாவின் நான்கு வருட கல்லூரி வாழ்க்கையில் வந்து போன காதல்களை பதிவு செய்கிறேன்.
தமிழ் மண்ணுக்கே உரியா பண்பாடும், கலாச்சாரமும் கெடாமல் காதல் பதிவு இருக்கும் என்கிறார் முத்துராமலிங்கன்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment