இன்னும் 15 படங்கள் இயக்குவேன்: சந்தோஷ் சிவன் சொல்கிறார்

No comments
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் சந்தோஷ் சிவன். தான் இயக்கி தயாரித்துள்ள இனம் படத்தை விரையில் வெளியிட உள்ளார். இதுபற்றி அவர் லிங்குசாமி அலுவலகத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டபோது நான் அஞ்சான் படப்பிடிப்பில் பிசியாக இருந்தேன். அந்த விருதால் எனக்கு மகிழ்ச்சி. 
நான் மறந்து போன நண்பர்களை மீண்டும் நினைவுபடுத்தியது. எல்லோரும் எனக்கு வாழ்த்துச் சொன்னார்கள். இனி நான் படம் இயக்க மாட்டேன் என்று செய்திகள் வந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். 
அப்படி நான் எப்போதும் சொன்னதில்லை. அஞ்சான் படத்துக்கு பிறகு ஒரு கமர்ஷியல் படத்தை தயாரித்து இயக்கப்போகிறேன். துப்பாக்கி, அஞ்சான் போன்ற கமர்ஷியல் படங்களை இயக்குவதே நான் சொந்த படம் எடுப்பதற்காகத்தான். இன்னும் 15 கதைகள் என்னிடம் இருக்கிறது. 
அனைத்தையும் இயக்குவேன். சினிமாவில் இருக்கிற வரை படம் இயக்குவேன். நான் இயக்கி உள்ள இனம் படம் இலங்கை அகதிகளைப் பற்றியது. அதை வெளியிட வேண்டிய தருணம் வந்து விட்டது. 
அடுத்த மாதம் வெளியிடுகிறேன். இலங்கை தமிழ் அகதிகளின் கண்ணீர் கலந்த காதல் கதை. போருக்கு எதிரான கதை. இந்தி, மலையாள படங்களை விட இப்போது தமிழ் படங்களிலேயே அதிகம் கவனம் செலுத்துகிறேன் என்றார்.

No comments :

Post a Comment