கன்னட நடிகர் அம்ரீஷ் மருத்துவமனையில் அனுமதி: செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது

No comments
1980களில் கொடிகட்டிப் பறந்த கன்னட நடிகர் அம்ரிஷ். அரசியலில் இணைந்து எம்.பி. எம்.எல்.ஏ ஆனார். தற்போது கர்நாடக வீட்டு வசதித்துறை அமைச்சராக உள்ளார். நடிகை சுமலதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களாகவே அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு செயற்கை சுவாசம் கொடுத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அம்ரிஷிசுக்கு இதயம், இரைப்பை, சிறுநீரகம் ஆகியவற்றில் பிரச்னை இருப்பதால் அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டாலும் தீவிர சிகிச்சை பிரிவிலேயே தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 முதல்வர் சித்தராமையா மருத்துவமனைக்குச் சென்று அம்ரிஷை பார்த்தார். பின்னர் டாக்டர்களுடன் ஆலோசனை நடத்திய அவர் அம்ரிஷிக்கு உயர்தர மருத்து சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

No comments :

Post a Comment