சிம்பு-ஹன்சிகாவுக்கு தோரணம் கட்ட தயாராகும் ரசிகர்கள்!

No comments
சிம்பு-ஹன்சிகாவின் ரியல் லவ் டூயட் திரைக்குப்பின்னால் ஓடிக்கொண்டிருந்தபோதும், மீண்டும் மாஜி காதலியான நயன்தாராவுடன் சிம்பு இது நம்ம ஆளு படத்தில் ஜோடி சேர்ந்திருப்பதால் அவரது ரசிகர் வட்டாரத்தில் புகைச்சல் உருவாகியிருக்கிறது. இதனால் அஜீத்-ஷாலினியைப்போன்று சிம்பு-ஹன்சிகா ஜோடியை கொண்டாடி வந்தவர்கள், ட்ராக் மாறிடுமோ என்று சிலகாலம் தடுமாறி நின்றனர். ஆனால், நயன்தாரா வெறும் தோழிதான். 
ஹன்சிகாதான் இனி நிரந்தர காதலி என்று சிம்பு ஸ்டேட்மெண்ட் விட்டதையடுத்து இப்போது அவரது ரசிகர்களுக்கான குழப்பம் நீங்கி விட்டது. அதனால், சிம்பு-ஹன்சிகா முதன்முதலாக ஜோடி சேர்ந்துள்ள வாலு படத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள் சிம்புவின் ரசிகர்கள்.
 அப்படம் வெளியாகும்போது, இதுவரை சிம்பு படத்திற்கு இல்லாத அளவுக்கு பெரும் பப்ளிசிட்டிகளை முடுக்கி விட திட்டமிட்டுள்ளனர். 
குறிப்பாக, விஜய்-அஜீத் படங்கள் வெளியாகும் நாளன்று எப்படி, பாலாபிஷேகம், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று அமர்க்களப்படுத்துவர்களோ அந்த அளவுக்கு சிம்பு-ஹன்சிகாவின் கட்அவுட்களுக்கு அபிஷேகம், தோரணம் என்று பரபரப்பு கூட்ட இப்போதே தயார்நிலையில் இருக்கிறார்கள் சிமபுவின் ரசிக கோடிகள்.

No comments :

Post a Comment