சுறுசுறு முருகதாஸ் விறுவிறு விஜய்

No comments
முன்னணி நடிகராயிட்டோம், ஒரு படம் முடிந்ததும் நாலு மாதம் ரெஸ்ட் எடுப்போம் என்று இன்றுவரை விஜய் நினைத்ததில்லை. அதிகபட்சம் சில வாரங்கள். அதற்குள் அடுத்தப்பட ஷூட்டிங்கிற்கு டாணென்று ஆஜராகிவிடுவார். ஜில்லா முடிந்ததும் முருகதாஸின் படம் தொடங்கியது. முதல் ஷெட்யூல் கொல்கத்தாவில். அடுத்தது சென்னையில். 
சென்னை விமான நிலையத்தில் சில முக்கிய காட்சிகளை எடுத்தனர். சென்னை ஷெட்யூல் முடிந்ததும் ஹைதராபாத் செல்லவுள்ளனர். 
ஒரு மாதம் வரை நீடிக்கும் பெ‌ரிய ஷெட்யூலாக இது இருக்கும் என்கிறார்கள் படயூனிட்டில். சமந்தா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் அனிருத் ஏற்கனவே முடித்துவிட்டார். 
ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டுள்ளது. இன்னும் நான்கே மாதங்களில் படத்தை முடித்து வெளியிடும் திட்டத்தில் ஜெட் வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் முருகதாஸும், விஜய்யும். இதில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment