வல்லினத்துக்கு வழி பிறந்தது: 28ந் தேதி ரிலீஸ்

No comments
ஈரம் படத்திற்கு பிறகு அறிவழகன் இயக்கி உள்ள படம் வல்லினம். தேவயானி தம்பி நகுல் ஹீரோ, மிருதுளா ஹீரோயின். தமன் இசை. கிரிக்கெட் வீரர்களுக்கும், பாஸ்கட் பால் வீரர்களுக்கும் இடையேயான மோதலுடன். விளையாட்டுக்குள் இருக்கும் அரசியலை வெளிச்சம்போட்டு காட்டும் படம். நகுல் 6 மாதங்கள் பாஸ்கட் பால் பயிற்சி எடுத்து மிகவும் கஷ்டப்பட்டு நடிச்ச படம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் படத்துக்கு தடங்கலுக்கு மேல் தடங்கல். பெங்களூருக்கு படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் தொழிலாளர் பிரச்னையால் படப்பிடிப்பு ரத்தானது. 
இதனால் ஒரு கோடி செலவில் செயற்கை விளையாட்டு மைதானம் அமைத்து கிளைமாக்ஸ் படமாக்கப்பட்டது. திட்டமிட்ட பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு பட்ஜெட் உயர்ந்தது, ஆஸ்கர் பிலிம்சின் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்ததால் அந்த நிறுவனத்துக்கு நிதி நெருக்கடி. 
இதனால் படப்பிடிப்புகள் மெதுவாகத்தான் நடந்தது. இதன் காரணமாக படத்தை 2 வருடங்களாக இழுத்தடித்து முடித்தார் அறிவழகன். இந்த படம் ஆரம்பித்த பிறகு நகுலும், மிருதுளாவும் வேறொரு படத்தில் நடித்து அந்த படங்களும் ரிலீசாகிவிட்டன. 
 ஒரு வழியாக எல்லா பிரச்னைகளும் தீர்ந்து வருகிற 28ந் தேதி படம் ரிலீசாகிறது. 500 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ஈரம் படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாவதால் அறிவழகன் மிகவும் எதிர்பார்க்கும் படம்.
காதலில் விழுந்தேன் படத்துக்கு பிறகு நகுல் நடித்த படங்கள் எதுவும் அவருக்கு பெயரை பெற்றுக் கொடுக்கவில்லை எனவே இந்தப் படத்தை அவர் மிகவும் எதிர்பார்க்கிறார். புதுமுகம் மிருதுளாவுக்கும் அவர் கேரியரை தீர்மானிக்கப்போகும் படம்.

No comments :

Post a Comment