தெலுங்கு த்ரிஷியத்தில் மீனா!

No comments
மலையாளத்தில் வெளிவந்து பம்பர் ஹிட் அடித்த த்ரிஷயத்தின் ரீமேக் சீசன் இது. விட்டால்... ஒரியா, போஜ்புரி, அசாமி மொழியில் கூட ரீமேக் செய்து விடுவார்கள் போலிருக்கிறது. அந்த அளவிக்கு த்ரிஷியத்தின் ரீமேக் அலை வீசுகிறது. தெலுங்கில் த்ரிஷியத்தின் ரீமேக்கில் மோகன்லால் கேரக்டரில் வெங்கடேஷ் நடிக்கிறார். 
மீனா நடித்த கேரக்டரில் அவரே நடிக்கிறார். 22 பீமேல் கோட்டையம் படத்தை தமிழிலும், தெலுங்கிலும் ரீமேக் செய்த ஸ்ரீப்ரியாதான் த்ரிஷியத்தை தெலுங்கில் இயக்குகிறார். 
 இதுபற்றி மீனா கூறியதாவது: தெலுங்கில் வெங்கடேசுடன் சண்டி, அப்பாய்காரு, சுந்தரகாண்டா,, சூரியவம்சம், படங்களில் நடித்திருக்கிறேன். அத்தனையும் ஹிட் படங்கள். இப்போது த்ரிஷியம் ரீமேக்கில் அவருடன் இணைகிறேன். 
செண்டிமெண்டாக அதுவும் ஹிட்டாகும். மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. த்ரிஷியத்தின் தமிழ், கன்னட ரீமேக்கில் நான் நடிக்கவில்லை. என்கிறார் மீனா.

No comments :

Post a Comment