சூதுகவ்வும் வில்லன் சிம்ஹா ஹீரோவானார்!

No comments
பீட்சா, நேரம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்த சிம்ஹா, சூதுகவ்வும் படத்தில் காமெடி வில்லனாக நடித்தார். ஜிகிர்தண்டா படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளர். இப்போது உறுமீன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகி விட்டார். ஜீரோ ரூல்ஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரிக்கிற படம். அதிதி ஹீரோயினாக நடிக்கிறார். சக்திவேல் பெருமாள்சாமி என்பவர் இயக்குகிறார். அச்சு இசை அமைக்கிறார், ஸ்ரீசரவணன்-ஜி.மனோகரன் ஒளிப்பதிவு செய்கிறார்கள். 
படத்தின் துவக்க விழா ஜீரோ ரூல்ஸ் அலுவலகத்தில் நடந்தது. தயாரிப்பாளர் சி.வி.குமார், டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் கலந்து கொண்டனர். மார்ச் 5ந் தேதி கோவையில் படப்பிடிப்புகள் நடக்கிறது. 
 "உறுமீன் என்றால் பெரிய மீன் என்று பொருள். காமெடி, ஆக்ஷன், திரில்லர் படம். படத்தில் சிம்ஹா அதிதி தவிர இன்னொரு முன்னணி நடிகர் ஒருவரும் நடிக்கிறார்" பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. என்கிறார் இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி.

No comments :

Post a Comment