கோச்சடையான் பாடல்களை அமிதாப் வெளியிடுகிறார்!

No comments
சூப்பர் ஸ்டார் ரஜினி, தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, நாசர் நடித்துள்ள கோச்சடையான் படம் மோசன் கேப்சரிங் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ளார். கே.எஸ்.ரவிகுமார் மேற்பார்வை இயக்குனராக பணியாற்றி உள்ளார். சுமார் 100 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் கடந்த இரண்டு வருடமாக தயாரிப்பில் உள்ளது. 
மூன்று முறை இதன் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாடல் வெளியிடும் பலமுறை அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இப்போது ஏப்ரல் 11, படம் ரிலீஸ் உறுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
பாடல் வெளியீட்டு விழா வருகிற மார்ச் 9ந் தேதி காலை 10.30 மணிக்கு சத்யம் திரையரங்கில் நடக்கிறது. இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் பாடல்களை வெளியிடுகிறார். விழாவில் கே.பாலச்சந்தர், பாரதிராஜா, கமல், மகேந்திரன் உள்ளிட்ட தமிழ் திரையுலகின் மிக முக்கிய பிரமுகர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள்.
 படத்தில் சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள். அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். அதுவும் ஒரு அழைப்பிதழுக்கு ஒருவர் மட்டும்தான். விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

No comments :

Post a Comment