விஜய் மில்டனுக்கு தூது விடும் பிரபல ஹீரோக்கள்!
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்றொரு படத்தை ஏற்கனவே இயக்கியவர்தான் கேமராமேன் விஜய் மில்டன். ஆனால் அந்த படம் தோல்வியடைந்தது. அதனால், அதன்பிறகு படம் இயக்கியதிலிருந்து விடுபட்டு, கேமராமேனாக மட்டுமே பணியாற்றி வந்தவர், பல வருடங்களாக தனக்குள் ஊற போட்டு வைத்திருந்த கதையை கையிலெடுத்து பசங்க-2 என்ற பெயரில் மீண்டும் இயக்குனராக களமிறங்கினார்.
அந்த படத்தைதான் பின்னர் கோலி சோடாவாக மாற்றினார். அப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததால், விஜய்மில்டன் இப்போது முனனணி இயக்குனராகி விட்டார். ஸ்டார் வேல்யூ என்பது இல்லாமல் தனித்துவமாக அவர் வெற்றி பெற்றிருப்பதால் இப்போது முன்னணி ஹீரோக்களுக்கு விஜய்மில்டனின் இயக்கத்தில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
அதனால், பல ஹீரோக்கள் தன்னை வைத்து படம் இயக்குமாறு அவருக்கு தூது விட்டுக்கொண்டிருக்கும் நிலையில், பருத்தி வீரன் கார்த்தியும் தன்னை வைத்து ஒரு படம் இயக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாராம்.
அதனால் விஜய்மில்டனின் அடுத்த படம் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் என்று தெரிகிறது. அப்படத்தைகூட ஏற்கனவே கார்த்தியை வைத்து பையா படத்தை இயக்கிய லிங்குசாமியின் திருப்பதி பிலிம்ஸ் தயாரிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment