கெட்டப் பெண்ணாக நடிக்க ஆசைப்படும் தமன்னா!
அஜீத்துடன் ஆரம்பம் படத்தில் ரீ-என்ட்ரி ஆன நயன்தாரா தற்போது பிசியான கதாநாயகி ஆகி விட்டது போன்று, வீரம் படத்தில் என்ட்ரியான தமன்னாவும் தெலுங்கு, இந்தி என பிசியாகத்தான் இருக்கிறார். இந்தியில், அக்சய்குமார், சைப் அலிகான் போன்ற ஹீரோக்களுடன் டூயட் பாடி வருபவர், தெலுங்கில் அனுஷ்கா-பிரபாஸ் நடிக்கும் பாகுபாலி மற்றும் மகேஷ்பாபு நடிக்கும் ஆக்டு போன்ற படங்களிலும் நடிக்கிறார்.
ஆக, இரண்டு மொழியிலுமே முன்னணி ஹீரோக்களுடன் நடித்துக்கொண்டிருக்கிறார் தமன்னா.
இந்த நிலையில், தொடர்ந்து காதலிப்பது, கவர்ச்சி காட்டுவது என்று நடித்த அவருக்கு போரடித்து விட்டதாம். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இப்படி ஹீரோக்களின் தோளில் தொங்குவதும், முதுகில் ஏறுவதுமாக நடிப்பது என்று தனது மனக்குமுறலை சில டைரக்டர்களிடம் கொட்டி தீர்த்து வருகிறார் தமன்னா. அப்படியென்றால் அடுத்து எந்த மாதிரி திறமை காட்டும் ஆசை உள்ளது? என்று கேட்பவர்களிடத்தில், ஆக்சன் செய்யணும், அடுத்தப்படியாக கெட்டப்பெண் அதான் வில்லியா நடிக்கணும். இப்படியெல்லாம் நடிக்கிறபோது, இன்னும் வெரைட்டியா நடிக்க முடியும்.

ஹீரோயினின்னா வட்டத்தை விட்டு தாண்ட முடியாது.ஆனால் வில்லின்னா வட்டத்துக்குள்ள நிற்காமல் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாமே? அப்படி நடிக்கிறபோது வித்தியாசமான பர்பாமெனஸ காட்டி ஸ்கோர் பண்ணலாம் என்று தனது மனதில் இருக்கும் ஆசையை கொட்டி வருகிறார்.
தமன்னாவின் இந்த நடிப்பு தாகத்தை கேட்டவர்கள், நேரம் வரும்போது உங்களுக்குள் இருக்கிற கெட்டப்பெண்ணை களத்தில் இறங்கி விடுவோம் என்று வாக்குறுதி அளித்துளளார்களாம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment