நிஜ கிரிக்கெட் வீரராக களமிறங்கும் விஷ்ணு!

No comments
தமிழ் நடிகர்கள் இடம்பெற்றுள்ள சென்னை ரைனோஸ் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் நடிகர் விஷ்ணுவும் ஒருவர். சினிமாவில் நடிகராவதற்கு முன்பே இவர் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தவர். அப்போது ஒரு முறை அவரது முட்டியில் பலத்த அடிபட்டு, ஆறு மாத காலம் நடக்ககூட முடியாமல் இருந்திருக்கிறார் விஷ்ணு. அந்த அளவுக்கு சீரியசாக விளையாடக்கூடியவராம்

. அவரிடம் இருந்த விளையாட்டு ஆர்வத்தை அறிந்துதான், வெண்ணிலா கபடிக்குழு படத்தில் விஷ்ணுவை கபடி விளையாட்டு வீரராக மாற்றியிருக்கிறார் சுசீந்திரன். அப்படம் வெற்றி பெற்றதையடுத்து, இப்போது மீண்டும் விஷ்ணுவைக்கொண்டு தான் இயக்கும் படத்தை கிரிக்கெட் விளையாட்டை மையமான கதையிலேயே இயக்குகிறார்

சுசீந்திரன். இதனால் மிகுந்த உற்சாகத்துடன் இப்படத்தில் நடிக்கிறார் விஷ்ணு. ஜீவா என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்துக்காக, நிஜ கிரிக்கெட் வீரராக தனது சுயரூபத்துடனேயே களத்தில் இறங்கியிருப்பதாக சொல்லும் விஷ்ணு, தற்போது படப்பிடிப்பு தொடங்கியிருக்கும் நிலையில், இந்த படம் ஒரு கிரிக்கெட் வீரனின் வேகம், வெறி, ஆர்வம் என அனைத்து அம்சங்களும் அமைந்த கதை என்பதால், நிஜ கிரிக்கெட் வீரனின் பிரதிபலிப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தப்போகிறேன் என்று சொல்லும் விஷ்ணு. இந்த படம் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி விளையாட்டை நேசிக்கும் அனைவருக்குள்ளும் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமையும் என்கிறார்.

No comments :

Post a Comment