அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கவில்லையாம்!

No comments
வீரம் படத்தை அடுத்து கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்காக, தனது உடம்பை ஸ்லிம் பண்ணிக்கொண்டிருக்கிறார் அஜீத். ஏற்கனவே ஆரம்பம் படத்திற்காக உடல் எடையை குறைத்திருந்தவர், வீரம் படத்திற்கு சற்று அதிகப்படுத்தினார். ஆனால், இப்போது நடிப்பது அவரை இன்னும் இளமையாக வித்தியாசமான கோணத்தில் வெளிப்படுத்தும் கதை என்பதால், இந்த படத்திற்காக தனது உடலை கணிசமான அளவு குறைத்துக்கொண்டிருக்கிறார் அஜீத். 
 இதற்கிடையே, இப்படத்தைப்பற்றிய செய்திகள் வெளியானபோது, அனுஷ்காவே அஜீத்துக்கு ஜோடியாக நடிப்பதாக செய்திகள் பரவின. ஆனால், இப்போது விசாரித்தால் அனுஷ்கா நடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்கிறார்கள்.
 அஜீத்துடன் நடிப்பதற்கு அனுஷ்கா தயாராக இருந்தபோதும், அவர் தற்போது ராணி ருத்ரம்மா தேவி, பாகுபாலி படங்களுக்காக தனது பாடி லாங்குவேஜை பழைய காலத்து ராணிகள் ஸ்டைலுக்கு மாற்றியிருப்பதால், அவரால் திடீரென்று அஜீத் படத்திற்காக உடற்கட்டை மாற்ற முடியாத நிலையாம். 
அப்படி மாற்றினால் அவரை நம்பியுள்ள சரித்திர படங்களின் படப்பிடிப்புகள் பல மாதங்களுக்கு கிடப்பில் போட வேண்டிய சூழ்நிலை வந்து விடுமாம். அதனால்தான், சூழ்நிலையை கெளதம்மேனனிடம் விளக்கி விட்டாராம் அனுஷ்கா.
 அதனால், இப்போது அஜீத்தின் இளமையான கெட்டப்புக்கு பொருத்தமான லேட்டஸ்ட் நடிகையாக தேடிக்கொண்டிருக்கிறார்கள். தமிழில் சரியான நடிகை கிடைக்கவில்லை என்றால், பாலிவுட் நடிகையை இறக்குமதி செய்யவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments :

Post a Comment