ஆடியோ விழா மேடையிலேயே ஹீரோ-ஹீரோயினை கைகோர்த்துக்கொண்டு ஆடிய உஷா உதூப்!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் பாசறையில் இருந்து வந்து ராஜாராணி படத்தை இயக்கிய அட்லி வெற்றி பெற்றதையடுத்து, இப்போது இன்னொரு இயக்குனர் ஸ்ரீ யும் டமால் டுமீல் என்ற படத்தை இயக்கி அறிமுகமாகிறார். வைபவ், ரம்யா ரம்பீசன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இதன் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
அப்போது, உஷா உதூப் மற்றும் நடிகை ரம்யா நம்பீசன் ஆகியோர் பாடியிருந்த இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டன. இதில் உஷா உதூப் பாடியிருந்த டுமீலு என்று பாடல் ரசிகர்களை எழுந்து ஆட்டம் போட வைக்கும் அளவுக்கு அதிரடியாக இருந்தது.
அப்படியொரு மாஸ் பாடலாக அது அமைந்திருப்பதால், இந்த ஆண்டு தமிழில் தனக்கு இப்பாடல ஒரு மெகா ஹிட்டாக அமையும் என்று உற்சாக மூடில் காணப்பட்டார் உஷா உதூப்.
அதனால், தன்னை மேடையில் பேச அழைத்தபோது, தனது சந்தோசத்தை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் வகையில், அந்த பாடலை ஒலிக்க வைத்து, படத்தின் நாயகனாக வைபவ்- நாயகி ரம்யா நம்பீசன் ஆகிய இருவரையும் அழைத்து கைகோர்த்தபடி மேடையில் கலக்கல் ஆட்டம் போட்டார் உஷா உதூப். அவரது இந்த ஆட்டம் ரசிகர்களையும் குஷியேற்ற, ஒரு ஐந்து நிமிடம் அரங்கமே சந்தோச அலையில் திணறிப்போனது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment