கத்ரீனா கைப் ‘கூல்’ பதில்

No comments
எனக்கு நடிக்க தெரியாது என்று கூறுபவர்கள் தாராளமாக கூறட்டும் என்று பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு நடிக்க வந்த கத்ரீனாவுக்கு பாலிவுட் அடைக்கலம் கொடுத்தது. கத்ரீனா, சல்மான் கானுடன் சேர்ந்து நடித்த மெய்ன் பியார் க்யூன் கியா என்ற படம் தான் அவருக்கு பாலிவுட்டில் பெயர் வாங்கிக் கொடுத்தது. இவர் நடிக்க வந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. 
ஆனால் நடிப்பு என்று வரும்போது அவரை குறைத்தே மதிப்பிடுகிறார்கள். கத்ரீனாவுக்கு செக்சியாக வரத் தான் தெரியும், நடிக்கத் தெரியாது என்ற கருத்து நிலவுகிறது. பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் நடத்தும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டவர்கள் கத்ரீனாவின் நடிப்புத் திறமைக்கு மிகவும் குறைவான மதிப்பெண் அளித்துள்ளனர். இதுகுறித்து கத்ரீனா கூறுகையில், அவர்களின் கருத்து என்னை பாதிக்காது. அவரவர் கருத்தை தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு. இது ஓ.கே. என்று கூறியுள்ளார்.

No comments :

Post a Comment