பாவனாவுக்கு கல்யாணம்: கன்னட தயாரிப்பாளரை மணக்கிறார்

No comments
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த நடிகை பாவனா. அங்கு இரண்டாவது வரிசை நடிகையாக இருந்த பாவனா தமிழில் மிஷ்கினின் முதல் படமான சித்திரம் பேசுதடியில் அறிமுகமானார். கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துக்கள், ஜெயம்கொண்டான் அசல் படங்களில் நடித்தார். அதன்பிறகு தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் மலையாளப் படங்களில் நடித்தார்.
 பின்னர் அங்கும் வாய்ப்பு குறைந்ததால் கன்னட படங்களில் நடிக்க ஆரம்பித்தார். போராளி படத்தை சமுத்திரகனி கன்னடத்தில் யாரே கோகடாலி என்ற பெயரில் ரீமேக் செய்தார். அதில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக அறிமுகமானார். அது முதல் கன்னடத்தில் முன்னணி இடத்தை பிடித்தார். கன்னடத்தில் பிசியாக நடித்தபோது கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பருடன் காதல் உருவானது.
 இதுபற்றி பலமுறை செய்திகள் வந்தபோதும் இருவரும் மறுக்கவில்லை. இப்போது இருவரும் தங்கள் குடும்பத்தாரின் அனுமதியை பெற்று விட்டதாகவும் வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் திருமணம் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக இருவரின் குடும்பத்தாரும் சமீபத்தில் பெங்களூரில் சந்தித்து பேசி உள்ளனர். இந்த பேச்சில் திருமணத்தை கேரளாவில் நடத்துவது என்றும் வரவேற்பு நிகழ்ச்சியை பெங்களூரில் நடத்துவது என்றும் முடிவு செய்திருக்கிறார்கள்.

No comments :

Post a Comment