ராம்சரணுடன் மட்டும் கூடுதல் நெருக்கம்! காஜல் மீது தெலுங்கு ஹீரோக்கள் புகார்!!

No comments
தெலுங்கில் மகதீரா படத்தில் ஜோடி சேர்ந்த ராம்சரண்தேஜா-காஜல்அகர்வாலுக்கு அந்த படம் மெகா ஹிட்டாக அமைந்ததால் அதையடுத்து தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தனர். நல்ல ரொமாண்டிக்கான கதைகள் வந்தால் ராம்சரணே காஜலின் பெயரை பரிந்துரை செய்து வந்தார். இதனால், அவர்களுக்கிடையிலான நட்பு ஆழமானது. பின்னர், தமிழ்ப்படங்களில் காஜல் நடிக்க வந்து விட்டபோதும், அவ்வப்போது அவரை தன்னுடன் நடிக்க அழைப்பு விடுத்துக்கொண்டேயிருந்தார் ராம்சரண். அதனால் தற்போது தமிழில் படவாய்ப்புகள் குறைந்ததால் உடனே அவரிடம் தஞ்சமடைந்து விட்டார்
 காஜல்.

 வழக்கம்போல் அவருக்கு இருகரம் நீட்டி அடைக்கலம் கொடுத்த ராம்சரண், தற்போது இரண்டு படங்களில் காஜலுடன் நடித்து வருகிறார். அப்படி நடிக்கும் இரண்டு படங்களுமே காதல் கதைகள் என்பதால், இதுவரை நடித்ததை விடவும் கூடுதல் நெருக்கம் காட்டி நடிக்கிறார்களாம். அவர்களது நெருக்கம் படத்துக்குப்படம் அளவுக்கதிகமாகிக்கொண்டே இருக்கிறதாம். ஆனால், ராம்சரணுடன் காட்டுவது போன்று மற்ற ஹீரோக்களுடன் காஜல் நெருக்கம் காட்டுவதில்லையாம். இதனால் ஆந்திராவிலுள்ள சில இளவட்ட ஹீரோக்கள் காஜல் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்.


 இந்த அதிருப்தி விவகாரம் காஜலின் காதுகளை எட்ட உஷாராகி விட்டார். இப்படியேபோனால் தன்னை மற்றவர்கள் ஓரங்கட்டி விடுவர்கள் என்று நாக சைதன்யாவுடன் அடுத்து நடிக்கவிருக்கும் ஒரு படத்தின் போட்டோ செஷனிலேயே ஏகபோக தாராளம் காட்டி அசத்தி விட்டாராம். இதனால் அதிருப்தியாளர் கூட்டத்தில் உறுப்பினராக இருந்த நாகசைதன்யா இப்போது அதிலிருந்து நழுவி காஜலின் ஆதரவாளராகியிருக்கிறாராம். இதுபோன்று ஒவ்வொரு இளவட்டமாக அடுத்தடுத்து தனது பாசறைக்குள்இழுக்க திரைமறைவில் தீவிரம் காட்டி வருகிறாராம் காஜல்.

No comments :

Post a Comment