அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’!
அம்மா உணவகத்தின் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து அடுத்ததாக வரவிருக்கிறது ‘அம்மா திரையரங்கம்’.
முதல்வர் ஜெயலலிதா பல நலத்திட்டங்களை அறிவித்து அதனை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். அம்மா உணவகம், அம்மா மினரல் வாட்டர், அம்மா பசுமை காய், கனி அங்காடி உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும். அவருடைய இந்த திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் சினிமா ரசிகர்களைச் சந்தோஷப்படுத்தும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்று சென்னை மாநகராட்சி கூட்டத்தில் இன்று வெளியாகி உள்ளது. அம்மா உணவகத்தின் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து அடுத்ததாக வரவிருக்கிறது ‘அம்மா திரையரங்கம்’.
அத்தியாசவசியப் பொருட்களை மலிவு விலையில் கொடுத்த தமிழக அரசு, மக்களின் பொழுதுபோக்கு ஊடகமான திரையரங்குகளையும் அரசே அமைத்து, குறைந்த கட்டணங்களில் படங்களைத் திரையிட உள்ளதாம்.
மேலும் இந்த திரையரங்கங்களில் சிறுமுதலீட்டுப் படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment