போட்டோ ஷூட் நடத்திவிட்டு ஸ்ரேயாவை நீக்கினார் பாலா

No comments
போட்டோ ஷூட் நடத்தி முடித்த நிலையில் ஸ்ரேயாவை தனது படத்திலிருந்து நீக்கினார் பாலா.பாலா அடுத்து இயக்கும் படத்தில் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். இது கரகாட்டம் பற்றிய படம். இளையராஜா இசையமைக்கிறார். இதில் ஹீரோயினாக நடிக்க ஸ்ரேயாவிடம் பேசப்பட்டது. இதற்காக போட்டோ ஷூட் நடத்த ஸ்ரேயாவை அழைத்திருந்தார் பாலா. போட்டோ ஷூட் நடித்திவிட்டு, திருப்தியாக இருந்ததால் ஸ்ரேயாவுக்கு படக்குழு தரப்பில் பச்சைக்கொடி காட்டப்பட்டது. இதனால் சந்தோஷத்தில் மிதந்தார் ஸ்ரேயா. இந்த படம் மூலம் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என கனவு கண்டார்.
 ஆனால் அவரது கனவு நீண்ட நாள் நீடிக்கவில்லை. திடீரென வரலட்சுமியை அழைத¢து போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார் பாலா. இதில் ஸ்ரேயாவை விட வரலட்சுமி இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என பாலா நினைத்தாராம். இதனால் உடனேயே ஸ்ரேயாவை நீக்கிவிட்டு வரலட்சுமிக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டார். இதனால் ஸ்ரேயா அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த பட ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குகிறது. படத்திற்கான பாடல் பதிவை இளையராஜா ஏற்கனவே முடித்துவிட்டார்.

No comments :

Post a Comment