கஸ்தூரிராஜா இயக்கும் ஒயிலா!

No comments
மனுநீதி, காசு இருக்கணும்,எங்க ராசி நல்ல ராசி உட்பட பல படங்களை தயாரித்த ஜி.ஆரின் ஜி.ஆர் கோல்டு பிலிம்ஸ் பட நிறுவனம் அடுத்து இரண்டு படங்களை தயாரிக்க உள்ளன. இதில் ஒரு படத்தை கஸ்தூரிராஜாவும் மற்றொரு படத்தை ரவிராஜாவும் இயக்குகிறார்கள். கஸ்தூரிராஜா இயக்கும் படத்திற்கு ஒயிலா என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இப்படத்தில் நாயகன், நாயகி முற்றிலும் புதுமுகம். முக்கிய கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் ஜி.ஆர் நடிக்கிறார். ஜி.ஆர் ஏற்கெனவே, கஸ்தூரிராஜாவின் காசு பணம் துட்டு என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
 இவைதவிர, மற்றொரு படமான ரவிராஜா இயக்கும் படத்திற்கு ஓ.கே.ஓ.கே என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். இந்தப்படத்தில் கிஷோர் – ஹார்திகா, ஜி.ஆர் ஆகியோருடன் ஏராளமான முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள். ரவிராஜா, தமிழில் பல படங்களை இயக்கி இருக்கிறார். இவ்விரு படங்களும் தமிழ் மட்டுமின்றி கன்னடத்திலும் தயாராக உள்ளன. 
ஜி.ஆர் தயாரிப்பில் ரவிராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர்சாஸ்திரி அங்கே அமோக வெற்றிபெற்றதையடுத்து ஜி.ஆருக்கு கர்நாடகாவில் நட்சத்திர அந்தஸ்து ஏற்பட்டிருகிறது.

No comments :

Post a Comment