காக்காக்களுக்கு பயிற்சி கொடுக்கிறார் பி.வாசு!

No comments
தான் ஐஸ்வர்யாராயை வைத்து ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும் என்ற படத்தை இயக்கப்போவதாக சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தார் இயக்குனர் பி.வாசு. ஆனால், அப்படியொரு படத்தில் நான் நடிக்கவேயில்லை என்று மும்பை மீடியாக்களில் ஐஸ்வர்யாராய் சொன்னதாக அதிர்ச்சி செய்திகள் வளியாகின. இதனால் ஆடிப்போனார் பி.வாசு. நான் ஐஸ்வர்யாவிடம் கதை சொல்லி ஓகே வாங்கியிருப்பது உண்மை. ஆனால், 8 மாதங்களுக்குப்பிறகு நடக்க வேண்டிய படத்தைப்பற்றி இப்போதே செய்தி வெளியிட்டதால் அவர் இப்படியொரு மறுப்பு செய்தியை வெளியிட்டிருக்கிறார் என்று நம்ம ஊர் மீடியாக்களிடம் தெரிவித்தார். 
 மேலும், தற்போது இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் நடிப்பது உண்மை என்று திட்டவட்டமாக கூறி வரும் பி.வாசு. முதலில் என் படத்தில் நடிப்பதா? இல்லை மணிரத்னம் படத்தில் நடிப்பதா? என ஐஸ்வர்யாராய் குழப்பத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 
 இதற்கிடையே, தனது அனிமேஷன் படத்தில் ஐஸ்வர்யாராயுடன் இணைந்து சில காக்காக்களும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றன. அதனால், குறிப்பிடத்தக்க சில காக்காக்களுக்கு மட்டும் பயிற்சி கொடுக்க பிரான்ஸ் நாட்டில் இருந்து பயிற்சியாளர்கள் வரவிருக்கிறார்கள். 
அவர்கள் மூலம் அந்த காக்காக்களுக்கு 3 மாதங்கள் சிறப்பு பயிற்சி கொடுக்கப்போகிறோம் என்று தெரிவித்துள்ளார் அவர்.

No comments :

Post a Comment