இலங்கை தமிழர்கள் சோகமுகத்துக்கு சொந்தக்காரர்கள் அல்ல! - வி.சி.குகநாதன்

No comments
சமீபத்தில் சென்னையில் நடந்த அலையே அலையே படத்தின் ஆடியோ விழாவில், அப்படத்தைப்பற்றி பேசிய சீனு ராமசாமி, இந்த படத்தின் கதை நான் ஏற்கனவே இயக்கிய நீர்ப்பறவையைப் போன்று கடல் சார்ந்த கதையாக உள்ளது. அதோடு, இலங்கை தமிழர்களை பின்னணியாக கொண்ட கதை என்பதால், படத்தில் நடித்துள்ள கதாநாயகியின் முகத்தில் எந்நேரமும் சோகம் குடிகொண்டிருக்கிறது என்று தனது கருத்தை சொல்லி விட்டு அமர்ந்தார்.
 ஆனால், அதையடுத்து வி.சி.குகநாதன் பேச வந்தபோது, அவரது பேச்சை ஆட்சேபித்தார். இதற்கு முன்பு பேசிய யாரோ, இலங்கை தமிழர்களுக்கு சோகமுகம் என்பது போல் பேசினார்கள். அது சரியல்ல. 
மேலும் நானும் இலங்கையில் இருந்து வந்தவன்தான். நாங்கள் சோக முகத்துக்கு சொந்தக்காரர்கள் அல்ல. நாங்கள் வீரமுகம் கொண்டவர்கள் என்று தனது கருத்தினை ஆவேசமாக பதிவு செய்தார். 
 இதனால், மேடையில் அமர்ந்திருந்தவர்களின் முகத்தில் சற்று கலவரம் நீடித்தாலும், அதையடுத்து, சுவராஸ்யமான விசயங்களையும், அப்படத்தைப்பற்றிய ப்ளசான விசயங்களிலும் அவர் தனது பேச்சை திசை திருப்பியதால், அனைவரும் இயல்பான மனநிலைக்கு திரும்பினர்.

No comments :

Post a Comment