பாகுபாலிக்காக உடல் எடையை அதிகரிக்கும் பிரபாஸ்-அனுஷ்கா!
நான் ஈ ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் பிரமாண்ட சரித்திர படம் பாகுபாலி. இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அதில் ஒரு வேடத்துக்காக அவரது உடல் எடையை 20 கிலோவுக்கு மேல் அதிகப்படுத்த வேண்டும் என்று ராஜமவுலி கூறியிருக்கிறாராம். அதனால் தன் கைவசமிருந்த வேறு சில படங்களை அவசர கதியில் முடித்துக்கொடுத்து விட்டு உடல் எடையை அதிகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார் பிரபாஸ்.
ஆனால், உடல் எடையை குறைப்பதை விட அதிகப்படுத்துவது எளிதான விசயம்தான் என்றாலும், 20 கிலோ வரை உயர்த்துவது கொஞ்சம் ரிஸ்க்கான விசயம்தான் என்பதால், வெயிட் போடும் உணவுகளாக எடுத்துக்கொண்டு வரும் அவர், தனது வீட்டில் ஜிம் உருவாக்க, அமெரிக்காவில் இருந்து சில அதிநவீன கருவிகளை கப்பல் மூலம் ஐதராபாத்துக்கு கொண்டு வந்துள்ளாராம்.
அதில் எப்படி எப்படி பயிற்சி எடுக்க வேண்டும் என்று ஒரு பயிற்சியாளரை உடன் வைத்துக்கொண்டு இடைவிடாத பயிற்சியில் ஈடுபட்டுள்ள பிரபாஸ், பாகுபாலி வேடத்துக்காத்தான் இத்தனை ரிஸ்க் எடுக்கிறாராம். அதோடு, இந்த வேடத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் அனுஷ்கா என்பதால், அவரையும் உடல் எடையை அதிகப்படுத்த சொல்லியிருக்கிறாராம் ராஜமவுலி.
அதனால், இதுவரை உடல் எடையை குறைப்பதிலேயே கவனம் செலுத்தி வந்த அனுஷ்கா முதன்முறையாக உடல் எடையை அதிகப்படுத்த தனது விருப்ப உணவுகளையெல்லாம் பட்டியலிட்டு ரவுண்டு கட்டி வருகிறாராம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment