மனீஷாவை ஓரங்கட்டிய அமலாபால்!

No comments
விக்ரமுடன் நடித்த தெய்வத்திருமகள் படத்திலிருந்து ஸ்டார் வேல்யூ கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் அமலாபால். அதிலும் தலைவா படத்தில் விஜய்யுடன் நடித்த பிறகு பிரபலமில்லாத நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் இறங்கி வரமாட்டேன் என்று உறுதியாக இருக்கிறார். அதன்காரணமாக, தற்போது தனுஷ், ஜெயம்ரவியுடன் நடித்து வரும் அமலாபால், அடுத்தபடியாக விஜய், அஜீத், சூர்யா என மேல்தட்டு ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தே தீருவேன் என்று கங்கனம் கட்டிக்கொண்டு கோடம்பாக்கத்தில் முகாம் போட்டிருக்கிறார். 
 இந்த நேரத்தில், பொல்லாதவன், ஆடுகளம் படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ்-வெற்றிமாறன் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்திருக்கிற சேதியறிந்த அமலாபால், அந்த படத்தை எப்படியேனும் கைப்பற்றி விட வேண்டும் என்று திரைக்குப்பின்னால் தீவிர முயற்சிகளை எடுத்தார். 
விளைவு தனுஷின் ஆதரவும் அவருக்கு இருந்ததால் எளிதாக அந்த வாய்ப்பு இப்போது அமலாபாலுக்கு கிடைத்திருக்கிறது. ஆனால், முதலில் அந்த படத்துக்காக மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டு ஓ,கே ஆகியிருந்தவர் வழக்கு எண் பட நாயகி மனீஷா யாதவ் தான். 
இந்த படத்திற்காக தன்னை அழைப்பார்கள் என்று மாதக்கணக்கிலும் காத்திருந்தார். ஆனால் இப்போது தனக்கான வாய்ப்பை அமலாபால் அபகரித்து விட்ட சேதியறிந்து மனசொடிந்து போய் இருக்கும் மனீஷா, அடுத்து விதார்த்துடன் நடித்துள்ள பட்டய கிளப்பு பாண்டியாவாவது தன்னை காப்பாற்றுமா? என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்.

No comments :

Post a Comment