3டியில் கவர்ச்சி காட்டும் மந்திரக்கன்னி!
தமிழ் சினிமாவில் 3டி படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டிஜிட்டில் 3டி தொழில்நுட்பம் வந்துவிட்டதே இதற்கு காரணம். அம்புலி படம் இந்த தொழில்நுட்பத்தில் வெற்றி பெற்றது. இப்போது மந்திரக்கன்னி என்ற படத்தை சவுமியா ரஞ்சன் என்பவர் இயக்கிக் கொண்டிருக்கிறார். இயக்குனரே ஹீரோவாக நடிக்க காவியா, பாயல், பிரகதி என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். தாகூர் காந்த் ஒளிப்பதிவு செய்கிறார், கே.ராஜ் பாஸ்கர், மிதுன் சத்யா இசை அமைக்கிறார்கள்.
ஒரு காதல் ஜோடியை மந்திரவாதி ஒருவன் பழி சொல்லி பிரிக்கிறான். பின்னர் காதலன் கண் எதிரிலேயே காதலியை கற்பழித்து எரித்துக் கொல்கிறான். பிறகு காதலன் மந்திர சக்தியை பெற்று மந்திரவாதியை எப்படி பழிவாங்குகிறான் என்பது கதை. அந்தக் காலத்து கதைதான்.
ஆனால் 3டியில் கவர்ச்சி கலந்து தரும்போது புதுசாத்தானே இருக்கும். மூன்று ஹீரோயின்களும் தங்கள் அழகை கண்ணுக்கு அருகில் வந்து காட்டினால் ரசிகன் மிரண்டுதானே போவான்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment