மூளைமாற்று அறுவை சிகிச்சை பற்றிய படம்
திரைப்படக்கல்லூரி மாணவர் அன்பரசன் இயக்கும் படம் ஆய்வுக்கூடம். இது மூளைமாற்று அறுவை சிகிச்சை பற்றிய சயின்ஸ்பிக்ஷன் படம். இதுபற்றி அன்பரசன் கூறியதாவது: இருதயமாற்று அறுவை சிகிச்சை போன்று மூளை மாற்று அறுவை சிகிச்சையும் சாத்தியமானது என்று அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்து விட்டனர். அதாவது மரணப் படுக்கையில் இருக்கும் ஒரு அறிவாளியின் மூளையை எடுத்து மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்தினால்.
அந்த மூளை தொடர்ந்து செயல்பட்டு சமூகத்துக்கு தேவையானதை செய்யும்.
ஆனால் இந்த ஆராய்ச்சிக்கு உலகம் முழுவதும் தடை உள்ளது.
குளோனிங் போன்று இந்த ஆராய்ச்சியும் மனிதகுலத்தின் பிறப்பு, இறப்பு சுழற்சியை மாற்றி விடும். ஒரு கற்பனைக்காக இப்படி ஒரு ஆராய்ச்சி வெற்றிபெற்றால் எப்படி இருக்கும் என்பதை காமெடியாக காட்டுகிற படம் இது. பாண்டியராஜன் மருத்துவ விஞ்ஞானியாக நடித்திருக்கிறார்.
கணபதி, சவுந்தர், ப்ரீத்தி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். 55 நாட்களில் படத்தை எடுத்து முடித்து விட்டோம் என்கிறார் அன்பரசன்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment