வில்லேஜ் காட்பாதர் வீரன் முத்துராக்கு!
மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி, கோவில்பட்டி வீர லட்சுமி, கும்பக்கரை தங்கையா, வாட்டாக்குடி இரணியன் மாதிரி வில்லேஜ் காட்பாதர்கள் பற்றி நிறைய படம் வந்திருக்கிறது. இந்த வரிசையில் இப்போது வர இருக்கிறது, வீரன் முத்துராக்கு. சிவங்கை மாவட்டத்தில் உள்ள ஆவாரங்காடு என்ற ஏரியாவைச் சேர்ந்த வீரதீர சூரராம் இவர்.
முத்துராக்கின் கதையை சி.ராஜசேகர் என்பவர் வீரன் முத்துராக்கு என்ற பெயரில் படமாக எடுத்து வருகிறார். வெளுத்துக்கட்டு படத்தில் அறிமுகமான கதிர், இதில் முத்துராக்காக நடிக்கிறார்.
லியாஸ்ரீ முத்துராக்கின் காதலி மற்றும் மனைவியாக நடிக்கிறார். இவர்கள் தவிர சண்முகராஜன், ஆடுகளம் நரேன், சேரன்ராஜ் நடிக்கிறார்கள்.
"மலையூர் மம்பட்டியானின் வீரத்துக்கு கொஞ்சம் குறைவில்லாதது வீரன் முத்துராக்கின் வீரமும். எங்கள் பகுதியை சேர்ந்தவர் ஏழைகளுக்கு நல்லது செய்து துன்பங்களை அனுபவித்தவர்.
அவரை பற்றிய நாட்டுப்புற பாடல்கள் நிறைய இருக்கிறது. அவரை வெளி உலகத்துக்கு காட்ட வேண்டும் என்பதற்காக இந்த படத்தை எடுக்கிறேன்" என்கிறார் டைரக்டர் சி.ராஜசேகர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment