என் திருமணத்தை அம்மாதான் முடிவெடுப்பார்! சிம்புக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஹன்சிகா!!
வாலு, வேட்டைமன்னன் என சிம்புவுடன் இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் கமிட்டான ஹன்சிகா, அவருடன் காதலிலும் விழுந்தார். அதோடு, சில நடிகைகளைப்போன்று காதலை சீக்ரெட்டாக வைத்துக்கொண்டு நடிக்காமல், அதை டுவிட்டரிலும் வெளியிட்டு இன்னும் 5 வருடத்திற்கு பிறகு நானும், சிம்புவும் திருமணம் செய்து கொள்வோம் என்றும் தெரிவித்தார். ஆனால், ஹன்சிகாவின் இந்த அறிவிப்பை அவரது தாய்குலம் கடுமையாக எதிர்த்தார். அதோடு, சிம்புவை ஹன்சிகா சந்திப்பதையும் தடுத்து, கட்டுக்காவல் போட்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் சிம்புவின் தங்கை இலக்கியா திருமணமும் முடிந்து விட்டதால், அடுத்து சிம்புவின் திருமணம்தானே என்று ஹன்சிகாவை பார்க்கிறவர்களெல்லாம் எப்போது திருமணம் என்றுதான் கேட்டு வருகிறார்கள். ஆனால், முன்பெல்லாம் காதல் பற்றி கேட்டாலே வெட்கபபட்டு சிரிக்கும் ஹன்சிகா, இப்போது பதிலளிக்காமல் சோகமாகி விடுகிறார்.
அதைப்பார்த்து, அப்படியென்றால் உங்களுக்கிடையிலான காதல் முறிந்து விட்டதா? எனறு அடுத்த கேள்வியை கேட்கிறார்களாம்.
ஆனால், அதற்கும் பதிலளிக்காத ஹன்சிகா, அதைப்பற்றியெல்லாலம் முடிவெடுக்க இப்போது நேரம் இல்லை. இப்போது நான் சினிமாவில் ரொம்ப பிசியாக இருக்கிறேன். அதனால், திருமணம் செய்து கொள்ளவேண்டிய நேரம் வரும்போதுதான் அதைப்பற்றி யோசிப்பேன். அப்படி நான் திருமணம் செய்து கொள்ளும்போது என் அம்மாவின் முடிவுதான் என் முடிவாக இருக்கும் என்கிறாராம்.
இதனால், சிம்புவை விட அவரது ரசிக கோடிகள் பலத்த அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள். அதனால் ஹன்சிகாவை டுவிட்டரில் தொடர்பு கொண்டு எங்கள் தலைவர் சிம்புவை டீலில் விட்டு விடாதீர்கள் என்று அன்பான வேண்டுகோள் வைத்து வருகிறார்களாம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment