காதல் தேவதையை தேடுகிறார் ஆர்யா!

No comments
சினிமா பார்ப்பது, சினிமாக்காரர்களை பார்ப்பது என்றால் அனைவருக்கும் பிடிக்கிறது. ஆனால் சினிமாக்காரனுக்கு பெண் கொடுக்கத்தான் நாட்டில் ஆள் இல்லை. அதனால்தானோ என்னவோ, ஆள் நல்ல வாட்ட சாட்டமாக கட்டுமஸ்தாக இருக்கும் ஆர்யாவுக்கு இன்னமும் பெண் கிடைத்தபாடில்லை. சினிமாவில் உள்ள தற்போதைய ஹீரோக்களில், நடிகைகளிடம் அதிக நட்பு வளர்த்து வருபவர் ஆர்யா. அதனால் அவ்வப்போது அவர் கிசுகிசுக்களில் சிக்கியும் வருகிறார். 
அதோடு, சில சினிமா மேடைகளில் அவரது நட்பு வட்டார நடிகர்களே, நடிகைகளுடன் அவரை இணைத்து சிக்க வைத்து விடுகிறார்கள். இதனால், ஆர்யாவின் பெயர் எக்கச்சக்கமாக சிக்கி சிதைந்து கிடக்கிறது. ஆனால், இந்த நிலையில் இருந்து மாற வேண்டும் என்று தற்போது உறுதி எடுத்துள்ளார் ஆர்யா. அதனால், நடிகைகளுடனான நட்பை ஓரங்கட்டி விட்டார். 
வீடடில் பெண் பார்க்கிறார்கள் என்றதும், நயன்தாராவுடனான நெருக்கத்தைகூட தள்ளி வைத்து விட்டார். 
ஆக, இப்போது ரொம்ப நல்ல பிள்ளையாகி விட்டார். இனிமேல் எந்த ஹீரோவும மூக்கின் மேல் விரல் வைத்து ஆர்யா பற்றி அவதூறு பேச முடியாது என்ற நிலையாகி விட்டது. இருப்பினும், இன்னும் ஆர்யாவுக்குகேற்ற பெண் அமையவில்லையாம் அவரது பெற்றோர் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், எனக்கு காதல் கல்யாணம்தான் செட்டாகும் என்று சொல்லிக்கொள்ளும் ஆர்யாவும், தனது காதல் தேவதையை தேடிக்கொண்டு அலைகிறார்.
இதுபற்றி கேட்கும் நண்பர்களிடமும், சீக்கிரம் செட்டாகிடும் பாஸ் என்றும் நம்பிக்கை பீறிட குதூகலிக்கிறார் பாஸ் என்ற பாஸ்கரன்.

No comments :

Post a Comment