விலைமாது வேடத்தில் நடிப்பது ஒரு சோசியல் சர்வீஸ்! - நடிகை சாண்ட்ரா எமி

No comments
பொதுவாக சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் அத்தனை பேருக்குமே முதல் படத்தில் நல்லதொரு டீசன்டான வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட படங்களில் நடித்த பிறகுதான் வித்தியாசமான கதாபாத்திரங்களில் கவனம் செலுத்துவார்கள். குறிப்பாக, விலைமாது வேடங்களில் நடிக்க கால அவகாசம் எடுத்துக்கொள்வார்கள். 
அந்த வகையில், தற்போதைய தமிழ் நடிகைகளில் அனுஷ்கா, சங்கீதா, ஸ்ரேயா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் விலைமாதுவாக நடித்துள்ளனர். அந்த வரிசையில் இப்போது சாண்ட்ரா எமி என்ற புதுமுக நடிகையும் இணைந்துள்ளார். சிவப்பு எனக்கு பிடிக்கும் படத்தில் விலைமாதுவாகத்தான் அவர் ரசிகர்களுக்கு அறிமுகமாகிறார். இதுபற்றி சாண்ட்ரா எமி கூறுகையில், இந்த படத்தில் நடிப்பதற்கு முதலில் என்னை கேட்கவில்லை. 
இப்படியொரு கதை என்று சொன்னவர்கள் அதில் யாரை நடிக்க வைக்கலாம் என்று பரிசீலணை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது நான்தான், நான் நடிக்கிறேன் எனறு சொன்னேன். அப்போது, விலைமாது வேடம் ஒன்றும் ஆட்சேபனை இல்லையே என்று கேட்டார்கள். 
 அதற்கு, இது ஒரு நல்ல வேடம். குறிப்பாக, சோசியல் சர்வீஸ் செய்கிற மாதிரியான வேடம் இது. அதனால் இதில் நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று சொன்னேன். மேலும், இப்படத்தில் ஆபாசமாக காட்சிகள் எதுவும் இல்லை. என்னையும் அசிங்கமாக காட்டவிலலை. 
சமுதாய நலன் கருதும் வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் என்பதால், என்னை நல்லவிதமாகவே காண்பித்திருக்கிறார்கள் என்று சொல்லும் சாண்ட்ரா எமி, இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பாக பல நாட்களாக ஹோம் ஒர்க் செய்தாராம். அதோடு, இயக்குனர் கொடுத்த ஆராய்ச்சி புத்தகத்தையும் படித்து உள் வாங்கிக்கொண்டே கேமரா முன்பு வந்ததாகவும் சொல்கிறார்.

No comments :

Post a Comment