தமிழ் பொண்ணுக்கு சான்ஸ் கொடுங்க: கேட்கிறார் ஸ்ரீபிரியங்கா
புதுமுகம் ஸ்ரீபிரியங்காவுக்கு சொந்த ஊர் பாண்டிச்சேரி. அகடம் என்ற கின்னஸ் சாதனை படத்தில் பேயாக அறிமுகமானவர். இப்போது கங்காறு படத்தில் ஹீரோயின். முள்ளும் மலரும், பாசமலர் மாதிரி அண்ணன்-தங்கை பாசக் கதையாம். அதில் ஸ்ரீப்ரியங்கா தங்கையாக நடிக்கிறார். "நான் பக்கா தமிழ் பொண்ணு எனக்கு நிறைய சான்ஸ் கொடுங்க" என்கிறார் ஸ்ரீப்ரியங்கா.
அவர் மேலும் கூறியதாவது: "தமிழ் பொண்ணுங்க நடிக்க வரத் தயங்குறாங்கன்னு எல்லாரும் சொல்றாங்க.
நான் எங்க அப்பா அம்மாவ கன்வீன்ஸ் பண்ணி தைரியமா நடிக்க வந்திருக்கேன். எனக்கு நிறைய சான்ஸ் தருவாங்கன்னு நம்புறேன். கங்காரு படத்தில் தங்கை கேரக்டரா இருந்தாலும் நான்தான் ஹீரோயின். இதை ஏன் சொல்றேன்னா இங்க ஒரு படத்துல தங்கச்சியா நடிச்சிட்டா அடுத்த படத்துக்கும் தங்கச்சியாத்தான் நடிக்க கூப்பிடுவாங்களாம்.
ஆனா நான் ஹீரோயினாத்தான் நடிப்பேன். அப்பதான் ஹீரோகூட டூயட்டெல்லாம் பாட முடியும், ஸ்ரீதேவி மேடத்தை பார்த்து நடிக்க வந்தேன். சூர்யா சார்கூட நடிக்கிற அளவுக்கு வளரணும்.
சாமி சார் இயக்கத்துல நடிக்க போறியே அவர் பட்டுன்னு அடிச்சிடுவார்னு சொன்னாங்க. எனக்கு அப்படி எதுவும் நடக்கல. கடவுளுக்கு நன்றி.
மற்றவங்ககிட்ட எப்படி நடந்துக்கிட்டார்னு எனக்குத் தெரியாது என்கிட்ட நல்லபடி நடந்துக்கிட்டாரு. நான் ரொம்ப சின்னப்பொண்ணு இப்பதான் பிளஸ் டூ முடிச்சேன். கொஞ்சம் மெச்சூர் வந்ததும் கிளாமரா நடிக்கிறேன். அதுவரைக்கும் ரசிகர்களுக்கு பிடிச்ச மாதிரி அடக்க ஒடுக்கமா நடிக்க முடிவு பண்ணியிருக்கேன்" என்கிறார் ஸ்ரீப்ரியங்கா.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment