ஐ படத்துக்காக காத்திருக்கும் விக்ரம்!

No comments
தெய்வத்திருமகள் படத்திற்கு பிறகு விக்ரம் நடித்த ராஜபாட்டை, தாண்டவம், டேவிட் என பல படங்கள் வரிசையாக அவருக்கு தோல்வியை கொடுத்தன. அந்த சமயத்தில் கரிகாழன் போன்ற சில படங்கள் ஆரம்பிக்கப்பட்டபோது பிரச்னைகளில் சிக்கியதால் முடக்கப்பட்டன. இதனால் அடுத்தகட்டததுக்கு தாவ முடியாமல் அவர் தடுமாறிக்கொண்டு நின்ற நேரமதான் ஐ படத்துக்கு அழைப்பு விடுத்தார் ஷங்கர். அதனால், மற்ற படங்களை அப்படியே மறந்து விட்டு ஷங்கர் படத்திற்காக தன்னை தயார்படுத்தினார்.
 ஒவ்வொரு கெட்டப்புகளுக்கேற்பவும் தன்னை முழுசாக மாற்றிக்கொண்டு நடித்து வந்தவர், புதிய படங்களுக்கான கதைகள் கேட்ககூட மறுத்து வந்தார். ஆனால், இப்போது ஐ படப்பிடிப்பு முடிந்து விட்டதால் அடுத்து நடிப்பதற்காக சில டைரக்டர்களிடம் கதை கேட்டு வருகிறார். ஆனபோதும், சில படங்களில நடிக்க சம்மதம் சொல்லியிருக்கும் விக்ரம், இன்னமும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் காலதாமதம் செய்து வருகிறார். 
என்ன காரணம் என்று கேட்டவர்களிடத்தில், ஐ படத்தை ரொம்ப எதிர்பார்க்கிறேன். மேலும், பல படங்கள் ஓடாததால் எனது சம்பளமும் இறங்கி விட்டது. அதனால் ஐ படத்தின் ரிலீசுக்குப்பிறகுதான் புதிய படங்களில் நடிப்பதற்கான சம்பளம் பேசுவேன் என்று கூறிக்கொண்டிருக்கிறார். ஆக, ஐ படத்தின் வெற்றியை பொறுத்து விக்ரமின் படக்கூலி கடுமையாக எகிறும் என்று தெரிகிறது.

No comments :

Post a Comment