நெடுஞ்சாலைக்காக புதிய வாய்ப்புகளை தவிர்த்தேன்: ஷிவதா
சமீபத்தில் வெளியான நெடுஞ்சாலை படத்தில் நடித்திருப்பவர் ஷிவதா. நெடுஞ்சாலை படத்திற்காக இரண்டு பட வாய்ப்புகளை தவிர்த்தேன் என்கிறார் மேலும் அவர் கூறியதாவது: நெடுஞ்சாலை எனது முதல் படம் என்று மீடியாக்களில் எழுதி வருகிறார்கள். அது தவறு நெடுஞ்சாலைக்கு முன்பு மலையாளத்தில் பாசில் சார் இயக்கிய லிவிங் டூ கெதர் படத்தில் நடித்து விட்டேன். அந்தப் படத்தை பார்த்துவிட்டுதான் கிருஷ்ணா சார் நெடுஞ்சாலை படத்துக்கு அழைத்தார். நெடுஞ்சாலையின் கதை அற்புதமானது. மங்கா கேரக்டர் என் மனசுக்கு பிடித்த கேரக்டர், அதனால் அந்தப் படம் முடியும் வரை வேறு படங்களில் நடிக்ககூடாது என்று முடிவு செய்தேன்.
இரண்டு பட வாய்ப்புகளை தவிர்த்தேன்.
நெடுஞ்சாலை இரண்டு வருடங்கள் தயாரிப்பில் இருந்தது. பொறுமையாக காத்திருந்து நடித்தேன். 6 மாதங்கள் வரை பயிற்சி எடுத்தேன். படத்தில் மலையாள பெண் கேரக்டர் என்பதால் நானே டப்பிங் பேசியிருக்கிறேன். இப்போது படம் ரிலீசாகி என் நடிப்பை எல்லோரும் பாராட்டும்போது சந்தோஷமாக இருக்கிறது.
இனி அடுத்த படங்களில் நடிக்க தயாராகிவிட்டேன். தீவிரமாக கதை கேட்டு வருகிறேன். இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று எந்த வரைமுறையும் வைத்துக் கொள்ளவில்லை. கேரக்டருக்கு என்ன தேவையோ அப்படி நடிப்பேன் என்கிறார் ஷிவதா.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment