இந்தியில் நடிக்காதது ஏன்? ப்ரியா ஆனந்த் விளக்கம்!
தமிழில் வாமணன் படத்தில் அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த். வாமணன் வெற்றி பெறாததால் ப்ரியாவுக்கும் பெரிதாக சான்ஸ் கிடைக்கவில்லை. தெலுங்கு படங்களுக்கு போய்விட்டார். பிறகு திடீரென இங்கிலீஸ் விங்கிலீஸ் இந்திப் படத்தில் நடித்தார். நாடோடிகள் இந்தி ரீமேக்கில் நடித்தார். அசின், ஸ்ருதி மாதிரி ப்ரியா ஆனந்தும் இந்தி நடிகையாகிவிட்டார் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்னு எதிர்நீச்சல் மூலம் தமிழுக்கு யூ டேர்ன் அடித்து விட்டார். இப்போது வை ராஜா வை, அரிமா நம்பி, ஒரு ஊர்ல ஒரு ராஜா, இரும்பு குதிரை என ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்து வருகிறார்.
இந்திப்பக்கம் திரும்பவில்லை.
அது ஏன் என்பதற்கு ப்ரியா அளித்துள்ள விளக்கம்: வாமணன் சரியாக போயிருந்தால் தமிழ்ல நல்ல இடத்துல இருந்திருப்பேன். தெலுங்கு, இந்தின்னு எதிர்நீச்சல் போட்டு எதிர்நீச்சல் படம் மூலமாக இப்போ பிசியாயிட்டேன். இந்திப் படத்துல நடிக்கணுங்ற ஆசையெல்லாம் கிடையாது, இங்கிலீஷ் விங்கிலீசுக்கு ஆடிசன் நடந்தப்போ சும்மா கலந்துகிட்டேன் ஓகே ஆயிடுச்சு. அதற்கு பிறகு இந்திப் பட சான்ஸ் நிறைய வந்தது.
ஆனால் அவர்கள் கேட்ட தேதிகளை தெலுங்கு படத்துக்கு கொடுத்திருந்தேன். அதனால நடிக்க முடியல. இப்பவும் இந்திப் படங்கள் வருது ஆனால் தமிழ் படத்துல பிசியா இருக்குறதால நடிக்க முடியல. விரைவில் இந்திப் படம் ஒன்றில் நடிப்பேன். அதுக்கான பேச்சு வார்த்தை முடிஞ்சிருக்கு. அவர்களே முறைப்படி அறிவிப்பாங்க. என்கிறார் ப்ரியா.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment