மனிஷாயாதவை நீக்கியது ஏன்?: டைரக்டர் சீனுராமசாமி விளக்கம்
விஜய் சேதுபதியை வைத்து ‘‘இடம் பொருள் ஏவல்’’ படத்தை சீனு ராமசாமி இயக்குகிறார். இதில் மனிஷா யாதவ் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு நீக்கப்பட்டார். இதனால் மனிஷா யாதவ் நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து சீனுராமசாமியிடம் மாலைமலர் நிருபர் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:–
இடம் பொருள் ஏவல் படம் மலை கிராமத்து கதை. மனிஷா யாதவுக்கு மேக்கப் போட்டபின் முகத்தில் கிராமத்து பெண் சாயல் வரவில்லை. கடும் முயற்சி எடுத்தும் தோற்றத்தை மாற்ற முடியவில்லை. பட்டணத்து பெண் போலவே தெரிந்தார்.
எனவேதான் அவரை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
விஷ்ணு ஜோடியாக இன்னொரு கேரக்டரில் நடிக்கும்படி கேட்டுள்ளோம். இன்னும் அவர் பதில் சொல்லவில்லை.
இவ்வாறு சீனுராமசாமி கூறினார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment