சாக்லெட் பாய்க்கு குட்பை

No comments
தனது சாக்லெட் பாய் இமேஜ் ஜிகிர்தண்டா படத்தோடு காலாவதியாகிவிடும் என்று கூறினார் சித்தார்த். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியிருக்கும் ஜிகிர்தண்டாவில் இயக்குனராக நடித்துள்ளார் சித்தார்த். மதுரையின் நிஜ ரவுடிகளை அருகில் இருந்து கவனித்து படம் எடுக்க நினைக்கும் அவரது முயற்சி அவருக்கு ஆபத்தை தேடித்தருகிறது. அதிலிருந்து அவர் தன்னை விடுவித்துக் கொள்வதுதான் கதையாம். எனக்கு சின்ன வயதிலிருந்தே கேங்ஸ்டர் படங்கள் பிடிக்கும். ஜிகிர்தண்டா ஒரு கேங்ஸ்டர் படம் என்று கார்த்திக் சுப்பாராஜ் கூறினார். அதையே திருப்பிச் சொல்லியிருக்கும் சித்தார்த் இந்தப் படம் என்னுடைய சாக்லெட் பாய் இமேஜை மாற்றும் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
 லட்சுமிமேனன், சிம்ஹா, கருணாகரன், பிரதாப்போத்தன் போன்றவர்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை.

No comments :

Post a Comment